×

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ₹70 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, ஜூன் 12: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டைவேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை,  புதுப்பட்டி,  முள்ளுக்குறிச்சி, மெட்டால்லா, மங்களபுரம், சீராப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,050 மூட்டை விரலி மஞ்சள், 480 மூட்டை கிழங்கு மஞ்சள், 20 மூட்டை பனங்காளி மஞ்சள் என மொத்தம் 1,550 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர்.  விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர்.  இதில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹8,943க்கும், குறைந்தபட்சம் ₹6,629க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹7,350க்கும், குறைந்தபட்சம் ₹5,685க்கும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹13,645க்கும், குறைந்தபட்சம் ₹10,685க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 1,550 மூட்டை மஞ்சள் ₹70 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

Tags :
× RELATED கொட்டி தீர்த்த மழை